அண்டை நாடான உக்ரேனில் ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பின்னர், தனது வான்வெளியினை ரஷ்யா பயன்படுத்துவதற்கு தடைவிதிப்பதாக அமெரிக்க அரசாங்கம் செவ்வாயன்று அறிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது உரையில்,
அனைத்து ரஷ்ய விமானங்களும் அமெரிக்க வான் வெளியை பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்படும் அதேநேரம், ரஷ்யாவை மேலும் தனிமைப்படுத்துவதற்கும், அவர்களின் பொருளாதாரத்தில் கூடுதல் அழுத்தத்தை கொடுப்பதற்கும் நாங்கள் எங்கள் நட்பு நாடுகளுடன் இணைவோம் என்று கூறினார்.
இந்த தடையுத்தரவுகள் புதன்கிழமை இறுதிக்குள் அமுலுக்கு வரும் என்று அமெரிக்க போக்குவரத்துத் துறை கூறியுள்ளது.
பயணிகள் மற்றும் சரக்கு விமானங்கள் மற்றும் திட்டமிடப்பட்ட மற்றும் பட்டய விமானங்கள் “அனைத்து ரஷ்ய வணிக விமான சேவைகள் மற்றும் பிற ரஷ்ய சிவில் விமானங்களுக்கும் இந்த தடை உத்தரவு பொருந்தும்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]