அவுஸ்திரேலியாவில் பெய்துவரும் கடும் மழை காரணமாக அங்கு 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் சில மாகாணங்கள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், வீதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை ஒரு வாரகாலமாக வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியது.
அவுஸ்திரேலியாவின் வட, கிழக்கு பகுதியில் அமைந்துள்ள குயின்ஸ்லாந்து மற்றும் நியூசவுத்வேல்ஸ் மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்த தொடர் கனமழையால் குயின்ஸ்லாந்து மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு கடந்த 22 ஆம் திகதி முதல் பெய்து வரும் மழையால் தலைநகர் பிரிஸ்பேன் உள்பட பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
பிரிஸ்பேன் மாகாணம் முழுவதும் சுமார் 18 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மழை, வெள்ளம் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் 50 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன.
வீதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை ஒரு வாரகாலமாக வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியது.
இதனிடையே மிக அதிகமான மழை நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் பெய்து வருவதாகவும், இதனால் அங்குள்ள லிஸ்மோர் நகரம் வரலாற்றில் மிக மோசமான வெள்ள பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த கனமழைக்கு அவுஸ்திரேலியாவில் இதுவரை 9 பேர் பலியானதாகவும், பலர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]