கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தொடர்ந்தும் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் பொது மக்கள் நெருக்கடியினை எதிர்கொண்டு வருகின்றனர்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் போதுமான அளவுக்கு எரிபொருள் வழங்கப்படாத நிலைமை காணப்படுவதோடு, பொது மக்கள் நீண்ட வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
அத்தோடு, பல எரிபெருள் நிரப்பு நிலையங்களில் பெரும்பாலான நேரங்களில் எரிபொருள் இல்லை என்ற அறிவித்தல் பதாகையே காணப்படுவதாகவும் பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் நெற் செய்கையாளர்கள் அறுவடை செய்யும் இயந்திரத்திற்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
உரிய காலத்தில் அறுவடைய செய்ய முடியாத நிலைமையால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
எரிபொருள் தட்டுப்பாடு நிலைமை வழமைக்குத் திரும்பாததன் காரணமாக விவசாயிகள். உத்தியோகத்தகர்கள் என பலரும் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றமை காணக் கூடியதாக உள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]