ரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைன் தனது பிரதிநிதிகளை பெலாரசின் கோமல் பகுதிக்கு அனுப்பியுள்ளது.
இந்த நிலையில் குறித்த குழுவினர், ரஷ்ய பிரதிநிதிகளுடன் இன்று பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த பேச்சுவார்த்தையின் போது உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போரை முதலில் நிறுத்த வேண்டும் என உக்ரைன் தரப்பில் வலியுறுத்தப்படவுள்ளதாக தெரியவருகிறது.
இதேபோல் ரஷ்யா தரப்பில் உக்ரைனுக்கு நிபந்தனைகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன.
யுத்தகளம் பெரும் பதற்றத்திற்கு மத்தியில் இருந்து வரும் நிலையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]