உலகம் முழுவதும் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் போக்குவரத்து நெரிசல் மற்றும் போக்குவரத்து தொடர்பான மாசுபாட்டால் ஆஸ்துமா பாதிப்புக்கு உள்ளாகுவதாக அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.
இதனை அறிந்து ஆஸ்துமா குறித்த முழுமையான விழிப்புணர்வை பொதுமக்கள் அனைவரும் பெற்றிருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
இன்றைய திகதியில் பச்சிளங்குழந்தைகள் முதல் 18 வயது வரையிலான சிறார்கள் வரை ஓஸ்துமா பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தற்போது மாசடைந்த காற்று மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாகவும், சாலைகளில் பயணிக்கும் போது ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிகளாலும் உருவாகும் காற்று மாசின் காரணமாக ஆஸ்துமா பாதிப்பு ஏற்படுவது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
அதே தருணத்தில் ஆஸ்துமா பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கும், சிறார்களுக்கும் இன்ஹேலர் மற்றும் நெபுலைஸர் மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும்.
இத்தகைய பாதிப்பின் போது நுரையீரலின் கீழ்பகுதியில் உள்ள காற்று அறைகள் பாதிக்கப்படுவதால் அங்கு வரை மருந்துகள் செல்ல வேண்டும் என்பதற்காக நெபுலைசர் மற்றும் இன்ஹேலர் ஆகிய கருவிகளை பயன்படுத்தி மருந்துகளை மருத்துவர்கள் வழங்குகிறார்கள். இது பாதுகாப்பான சிகிச்சை முறை தான். சில குழந்தைகளுக்கு மட்டும் இன்ஹேலர் முறையில் மருந்தினை வழங்கும் பொழுது கூடுதல் கருவியினை பொருத்தி மருந்தினை செலுத்துவது நல்ல பலனை அளிக்கும் என்றும், கூடுதல் கருவிகளைப் பொருத்தி இன்ஹேலர் மூலம் மருந்தினை வழங்கும் போது, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் கால அவகாசத்தை மனதில் இருத்தி நிவாரணத்தை தொடரவேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
டொக்டர் ஆயிஷா.
தொகுப்பு அனுஷா.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]