ரொறொன்ரோ பார்க்கில் வலியம் குளிசைகள். விழுங்கிய 15-மாத குழந்தை.
கனடா-ரொறொன்ரோ டவுன் ரவுன் பார்க் சறுக்கியில் காணப்பட்ட வலியம் பில்லை சறுக்கியில் விளையாடிக் கொண்டிருந்த 15-மாத குழுந்தை விழுங்கிய சம்பவம் ஞாயிற்றுகிழமை நடந்துள்ளது.
கென்னிங்ஸ்ரன் மார்க்கெட் பெலிவியு ஸ்குய பார்க்கில் இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் பார்க் பூராகவும் சோதனையிட்டதில் 3 முழுமையான வலியம் பில்களும் ஒரு அரை குளிகையும் கிடக்க கண்டுபிடித்துள்ளனர்.
தாய் ஒருவரும் அவரது குழந்தையும் பார்க்கில் இருந்த சமயம் குழந்தை குளிகையை எடுத்துள்ளான். தாய் உடனடியாக வாய்க்குள் இருந்த குளிகையை வெளியே எடுத்துள்ளார்.இருந்தும் குளிசையின் ஒருபகுதி குழந்தையின் நாக்கில் உருகிவிட்டது.
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை பரிசோதிக்கப்பட்டான்.
குளிசைகள் வேண்டுமென்றே போடப்பட்டனவா அல்லது தவறுதலாக விழுந்தனவா என்பது குறித்து பொலிசார் விசாரனையில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்த தகவல் தெரிந்தவர்கள் 14வது டிவிசன் 416-808-1400 அல்லது அனாமதேயமாக Crime Stoppers 416-222-8477என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.