உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்காக சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
உக்ரைன் மீது ரஷியா நேற்று முன்தினம் படையெடுத்தது. இதனை தொடர்ந்து, உக்ரைனை பலமுனைகளில் இருந்து ரஷிய படைகள் தாக்க தொடங்கின.
உக்ரைனில் ரஷிய படைகள் 3-வது நாளாக தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகின்றது. இதனால் உக்ரைனில் உள்ள பல இந்திய மாணவர்கள் சொந்த ஊர் திரும்ப கடும் சவால்களை சந்திக்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றிவரும் நிலையில், அங்குள்ள இந்திய மாணவர்கள் ஊர்திரும்ப முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்காக சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களிடம் வீடியோ கால் மூலம் உரையாடிய மு.க.ஸ்டாலின், அங்குள்ள சூழ்நிலை குறித்து கேட்டறிந்தார். அவர்களை தைரியமாக இருக்கும்படி கூறிய முதல்வர் , அவர்கள் அனைவரையும் விரைவில் இந்தியா அழைத்து வர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]