இது யுத்தக்கப்பல் ,இது ரஸ்யாவின் யுத்தக்கப்பல்,இரத்தக்களறியையும் தேவையற்ற உயிரிழப்பையும் தவிர்ப்பதற்காக ஆயுதங்களை கீழே போட்டு சரணடையுங்கள் என இல்லாவிட்டால் தாக்கப்படுவீர்கள் கருங்கடலில் உள்ள தீவொன்றை காப்பாற்றுவதற்கான போராட்டத்தின் போது சரணடைய மறுத்து உயிர்துறந்த உக்ரைன் வீரர்களை பற்றிய தகவலை கார்டியன் வெளியிட்டுள்ளது.
உக்ரைன் கருங்கடலில் உள்ள தீவொன்றை பாதுகாப்பதற்காக முயற்சியில் ஈடுபட்டிருந்த உக்ரைன் படைவீரர்கள் ரஸ்யாவின் விமானதாக்குதலையும் கடற்படை தாக்குதலையும் எதிர்கொண்டனர்- ரஸ்ய யுத்தகப்பலில் இருந்து சரணடையுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்கமறுத்த அவர்கள் போரிட்டு உயிரிழந்துள்ளனர்.
கிரிமியாவிற்கு 186 மைல்தொலைவில் உள்ள 40 ஏக்கர் ஸ்னேக் தீவில் உக்ரைனின் 13 எல்லை காவலர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்கள் அனைவரும் சரணடைய மறுத்து உயிர்துறந்தனர் என உக்ரைன் அறிவித்துள்ளது. அவர்கள் அனைவருக்கும் உக்ரைன் வீரர்கள் என்ற விருதினை அறிவிக்கவுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அவர்கள் அனைவரும் விட்டுக்கொடுக்காமல் போராடி உயிரிழந்தனர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஸ்னேக் தீவில் கடமையில் ஈடுபட்டிருந்த உக்ரைனின் எல்லை காவல்படையினருக்கும் அந்த தீவை நோக்;கி வந்த ரஸ்ய கடற்படை கப்பலிற்கும் இடையிலான உரையாடல் பதிவாகியுள்ளது. உங்கள் ஆயுதங்களை கீழேபோடு;ங்கள் என ரஸ்ய கப்பலில் இருந்து உத்தரவு வெளியாகின்றது.
இது யுத்தக்கப்பல் ,இது ரஸ்யாவின் யுத்தக்கப்பல்,இரத்தக்களறியையும் தேவையற்ற உயிரிழப்பையும் தவிர்ப்பதற்காக ஆயுதங்களை கீழே போட்டு சரணடையுங்கள் என இல்லாவிட்டால் தாக்கப்படுவீர்கள் என ரஸ்ய கடற்படை அதிகாரியொருவர் தெரிவிப்பது பதிவாகியுள்ளது.
சிறிது நேரத்தின் பின்னா உக்ரைன் தரப்பிலிருந்து என பதில் வெளியாகின்றது. உக்ரைனின் ஊடகமொன்று உட்பட பல ஊடகங்கள் இந்த ஒலிநாடாவை வெளியிட்டுள்ளன.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]