ஐ.நா முன்றலில் ஈழத்தமிழர்களின் அவலம் நிறைந்த புகைப்படங்களால் சோகமடைந்த சுவிஸ் பொலிஸார்!
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுடைய புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பிரான்ஸிலுள்ள மனித உரிமை செயற்பாட்டாளர் ம.கஜனால் குறித்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதையடுத்து இன்று குறித்த இடத்திற்கு வருகைத்தந்த சுவிட்ஸர்லாந்து பொலிஸார் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புகைப்படங்களைப் பார்வையிட்டதுடன், அவர்களுடைய முகங்களில் சோகம் தழும்பிய நிலையை அவதானிக்க முடிந்தது