நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட கானா பாலா, பெற்ற வாக்குகள் பற்றி விவரம் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என மூன்றிலும் தி.மு.க. வெற்றிகளை குவித்து வருகிறது. இதை தி.மு.க கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் 300க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள கானா பாலா, சென்னை மாநகராட்சி திரு.வி.க.நகர் 6வது மண்டலம், 72வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டார். இந்த வார்டில் கானா பாலா 6095 வாக்குகள் பெற்று தோல்வியடைந்திருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக கட்சியை சேர்ந்தவர் சரவணன் 8303 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]