ஈழத் தமிழர்களின் விடுதலை மற்றும் கனவுக்காக கொடிய போரை சுமந்த முல்லைத்தீவு உறவுகளை மறந்து விட்டோமா?
தமிழ் அரசியல் தலைமைகளும் புலம்பெயர் தேச உறவுகளும் முல்லைத்தீவு உறவுகளுக்கு உதவ முன் வர வேண்டும் என்று ஈஸி24நியூஸ் வேண்டுகோள் விடுக்கிறது.
யாழ்ப்பாண உறவுகளுக்கு வெளிநாட்டு உதவிகள் உண்டு. அத்துடன் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா போன்ற பகுதிகளை கவனிக்க அரசியல் தலைவர்கள் உள்ளனர்.
கிழக்கில் அரசு சார்ந்து இயங்கும் அரசியல் பிரதிகள் பலர் அங்கு மக்கள் நலன் பேணி அபிவிருத்திகளை செய்கின்றனர்.
ஆனால் முள்ளிவாய்க்கால் எனும் பகுதியை சுமந்து இறுதி போரை எதிர்கொண்ட முல்லைத்தீவு மாவட்டம் யாரும் கவனிப்பாரற்ற நிலையில் தான் உள்ளது.
இலங்கையில் மிகவும் வறுமையான மாவட்டமாக ஐநா இனம்கண்ட முல்லைத்தீவு மக்களின் மேம்பாட்டுக்காக நாம் உறுதுணை புரிய வேண்டும்.
குறிப்பாக புலம்பெயர் தேச மக்கள் தமது உதவிகளை நலத்திட்டங்களை மேம்பாட்டு வேலைகளை அங்கே முன்னெடுக்க வேண்டும்.
தமிழ் அரசியல் தலைமைகளும் இதில் அக்கறை கொண்டு செயற்பட வேண்டும்.
போரை சுமந்த முல்லைத்தீவு உறவுகளை மறக்காமல் அவர்களின் மேம்பாட்டுக்கு உதவுவோம்.
கிருபா பிள்ளை
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]