ஜெனீவாவில் வீதி மறியலில் ஈடுபட்ட ஈழத்து இளைஞர்கள்!
புலம்பெயர்ந்துள்ள ஈழத்தமிழர்கள் ஜெனீவாவில் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்பு போராட்டத்தின் போது இளைஞர்கள் ரோம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் நடைபெற்று முடிந்த இறுதி யுத்தத்தின்போது, ஈழத் தமிழர்களுக்கு நீதி வேண்டி புலம்பெயர் தமிழர்களால் பாரிய கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் கனிசமான அளவு மக்கள் கலந்துகொண்டதுடன் தமிழர்களுக்காக பல கோஷங்களையும் எழுப்பியதை காணக்கூடியதாக இருந்தது.
இதன்போதே போராட்டத்தில் ஈடுபட்ட குறித்த இளைஞர்கள் ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டி வீதிமறியலில் ஈடுபட்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர்.