“இலங்கை அரசு பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என இலங்கைக்கு வெளியில் இருந்து சர்வதேசத்தின் கோரிக்கை வந்த நிலையில் தற்போது இலங்கைக்கு உள்ளே இருந்து மக்களும் இதே கோரிக்கையை வலியுறுத்துகிறார்கள். இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவது வரலாற்றின் சிறந்த தருணமாகவும் வாய்ப்பாகவும் அமையும்….”
பயங்கரவாத தடைச்சட்டம் 1979இல் ஒரு தற்காலிக சட்டமாகவே கொண்டுவரப்பட்டது. இப்போது 43 ஆண்டுகளைக் கடந்தும் நீள்கின்ற இச் சட்டத்தினால் தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்கள் பலர் சிறையில் காரணமின்றி வாடுகின்றனர்.
இதனால் இலங்கை மக்கள் கண்ணீர் சிந்தி வாழ்கின்றனர். இச் சூழல் பல குடும்பங்களையும் சமூகங்களையும் சிதைவுக்கு உள்ளாக்குகின்றது. அத்துடன் சவர்வதேச சமூகமும் இதனை பற்றி இலங்கைக்கு எடுத்துரைத்து வருகின்றது.
தற்போது இலங்கையில் புதிதாக பயங்கரவாத தடைச்சட்டம் உருவாக்கப்படும் நிலையில், அதனை உடன் நிறுத்தி பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்று கையெழுத்துப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.
பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பெரும் நெருக்கடிகளை சந்திக்கும் இலங்கை அரசாங்கம், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி மக்களின் ஆதரவையும் அபிமானத்தையும் உலகின் நலன்களையும் கொடைகளையும் பெற இது சிறந்த வாய்ப்பு.
இதனால் தமிழ் மக்கள் மாத்திரமின்றி இலங்கையின் அனைத்து இன மக்களும் மகிழ்வாகவும் சுதந்திரமாகவும் வாழ நேரிடும். அத்துடன் அதுவே வரலாற்றின் சிறந்த தருணமாகவும் வாய்ப்பாகவும் அமையும் என்பதும் மறுக்க இயலாத உண்மையாகும்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]