ஜெனிவா அமர்வை முன்னிட்டு தமிழ் மக்களுக்கு நீதிகோரும் மனிதநேய ஈருருளிப் பயணப் போராட்டம் நேற்று 24ஆவது தடவையாக பிரித்தானிய தலைநகர் லண்டனில் இருந்து முற்பகல் 10 மணியளவில் புறப்பட்டது.
பிரித்தானியப் பிரதமர் இல்லத்தின் முன்னால் நடத்தப்பட்ட ஒரு கவனயீர்ப்பு போராட்டத்துடன் ஆரம்பமாகியுள்ள இந்தப் பயணம் ஐ.நா மனித உரிமை பேரவையை நோக்கி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஐரோப்பிய ஆறு நாடுகளூடாக பயணத்தை மேற்கொள்ளவுள்ள செயற்பாட்டாளர்கள் மார்ச் 7 ஆம் திகதியன்று ஜெனிவாவை சென்றடைய திட்டமிட்டமிட்டுள்ள நிலையில், இந்தப் பயணத்துக்கு மக்கள் ஆதரவுகோரி அதன் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
முதலில் நெதர்லாந்துக்கு செல்லும் ஈருருளிப் பயண குழு அதன் பின்னர் பெல்சியம், ஜேர்மன், பிரான்ஸ், ஆகிய நாடுகளில் அரச, மற்றும் அரச சார்பற்ற பிரமுகர்களுடன் சந்திப்புக்களை நடாத்திய பின்னர் சுவிசில் ஐ.நா மன்றத்திற்கு முன்பாக உள்ள ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் மார்ச் 7ஆம் திகதி நடைபெறும் பேரணியிலும் கவனயீர்ப்புப் போராட்டத்திலும் இணையவுள்ளமை குறிப்பிடத்தக்கது
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]