ஏலியன்ஸ் பூமிக்கு வந்தால் என்ன நேரும்? ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை
உலக புகழ்பெற்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங், ஏலியன்ஸால் நம்மை அழிக்க முடியும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சாத்தியமுள்ள வாழத்தக்க வெளிக்கோள்கள் ஜிலிஸ்832சியில் அறிவார்ந்த வாழ்க்கை குறித்து பேசிய அவர் கூறியதாவது, ஏலியன்ஸை பூமிக்கு அழைத்தால் அது நமக்கு எதிராக முடியும், அவர்களை தொடர்பு கொள்ள கூடாது.
அங்கு ஒரு அறிவார்ந்த வாழ்க்கை இருக்கும் என்றால் நாம் அதை கேட்க முடியும்.
ஒரு நாள் நாம் இந்த மாதிரி கிரகத்தில் இருந்து சிக்னல்களை பெற வாய்ப்பு உள்ளது. ஆனால் நாம் திரும்ப பதில் அளிப்பதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கூறினார்.
ஏலியன்ஸ் அறிவார்ந்த் வாழ்க்கை மனித வாழ்க்கையை அழிக்க முடியும் என ஹாக்கிங் பேசுவது முதல் முறை அல்ல, கடந்த வருடம் ஜூலை மாதமும் இது போல் பேசினார் என்பது நினைக்கூரத்தக்கது.