விழி உறக்கம் நீங்கா விடியற் பொழுதாய்
கண்களை மறைக்கும் கனவுகளை
நனவாக்க பல மயில் தூரம்
கடந்து கானா கனவுகளை
உதிரமாய் உடைத்தெறியும் வாழ்வுதனில்
பகல் பொழுதில் பட்டினி கிடந்து
பாதி பசி தீர்வுடன் தீரா கனவுகளை
கடந்து கறைபடியா கைதனில்
கயவர் வீசும் கறைகள் காகிதமாய்
பறந்திட சந்தோஷமில்லா
உணர்வுகளாய் ஒற்றை வழி பாதையில்
ஓரமாய் சென்றாலும் தூற்றிடும்
துஷ்டனும் தூசியாய் படர்ந்து செல்வான்
சந்தோசம் தரா வேலைதனில் தகராறு
இல்லாமல் தள்ளி செல்வோர் பலர்
துள்ளி குதித்த தருணங்களை நொடிப்பொழுதில்
நொறுக்கிடவே ஒருகூட்டம்
கழுகு போல் தனியாய் காகம் போல் கூட்டமாய்
சுற்றியே வரும்
தன்மானம் இழந்து நிற்போர் பலர்
ஒரு வழிபோக்காய் வழிமாறும் வல்லவர் எவரோ….
கேசுதன்