திரையிசை உலகத்தில் ‘மெலடி கிங்’ என போற்றப்படும் இசையமைப்பாளர் வித்யாசாகரின் வாரிசு ஹர்ஷவர்தன், சிபிராஜ் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத படத்தின் மூலம் தமிழ் திரையிசை உலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
அறிமுக இயக்குநர் ஆ. பாண்டியன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத படத்தில் நடிகர் சிபிராஜ் கதையின் நாயகனாக நடிக்கிறார். பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐ.பி. கார்த்திகேயன் தயாரிக்கும் இந்த படத்திற்கு பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்ய, ஹர்ஷவர்தன் இசை அமைக்கிறார். இப்படத்தில் பணியாற்றும் நடிகர் நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹர்ஷவர்தன், சிறந்த இசையமைப்பிற்காக தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாய்ப்பு குறித்து ஹர்ஷவர்தன் பேசுகையில், ” சிறிய வயதிலிருந்து இசையைக் கேட்டு வளர்ந்த நான், அதன் மீதிருந்த ஈடுபாட்டின் காரணமாக லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியில் பியானோ இசையை கற்றுக் கொண்டேன். அதன் பிறகு கர்நாடக இசையும் அப்பாவின் வழிகாட்டலுடன் கற்றுக்கொண்டேன். இசை அமைப்பாளர்கள் ஏ ஆர் ரகுமான், ஜிவி பிரகாஷ், தமன் ஆகியோரிடம் பணியாற்றியிருக்கிறேன்.
நண்பர் ஒருவர் மூலமாக இயக்குநர் பாண்டியன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அவர் இயக்குநராக அறிமுகமாகும் படத்தின் கதையை கூறி இதற்கு இசை அமைக்க வேண்டும் என கேட்டபோது, அப்பாவின் அனுமதியுடன் இசையமைக்க ஒப்புக் கொண்டேன். முதல் படத்திலேயே பின்னணி இசைக்கும், பாடலுக்கும் முக்கியத்துவம் இருப்பதால் இளமையான – ரசிக்கும்படியான பாடல்களை எதிர்பார்க்கலாம்.” என்றார்.
சிபிராஜ் நடிப்பில் தயாராகவிருக்கும் இப்படத்தின் மூலம் ஹர்ஷவர்தன் இசை அமைப்பாளராக அறிமுகமாகி தமிழ் திரை இசை உலகில் திறமைசாலியாக உலா வரவேண்டுமென ‘மெலடி கிங்’ வித்யா