ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 28 ஆம் திகதி இடம்பெறும்.
அப்போது இலங்கை தொடர்பான எழுத்து மூல அறிக்கை மனித உரிமைகள் ஆணையாளர் திருமதி மிச்செல் பச்லெட்டிடம் சமர்ப்பிக்கப்படும் என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதுதொடர்பாக அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மேலும் தெரிவிக்கையில்,
இந்த அறிக்கை மார்ச் மாதம் 3 ஆம் திகதி கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்படும். ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு சரியான பதிலை வழங்கத் தயாரெனவும் குறிப்பிட்டார்.
அத்துடன் இம்முறை ‘பிம்ஸ்ரெக்’ அரச தலைவர்கள் மாநாடு மார்ச் 31 ஆம் திகதி கொழும்பில் இடம்பெறும்.
இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், மியன்மார், தாய்லாந்து ஆகிய 7 நாடுகள் இதில் பங்கேற்கவுள்ளன. இலங்கை இம்முறை இதற்குத் தலைமை தாங்குகிறது என்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்தார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]