பிரியதர்ஷினி டீச்சர் வேலை செய்யும் பொழுது ஒரு லோகோ பைலட்டை காதலித்தார். மங்களூர்-சென்னை வழித்தடத்தில் டீச்சரின் காதலர் ட்ரெயின் ஓட்டினார். தலச்சேரி ஸ்டேஷனில் ட்ரெயின் நிற்கும்பொழுது இருவரும் சந்தித்து பேசிக் கொள்வார்கள்.
மொபைல் போன்கள் மிகவும் அரிதாக இருந்த அந்தக் காலத்தில் இவர்களின் காதல் அப்படி வளர்ந்தது. டீச்சர் மிக அழகாக இருப்பார்கள். ஒருநாள் டீச்சர் காதலித்த ட்ரெயின் டிரைவர் ரயில் விபத்தில் உயிரிழந்தார். இந்த விஷயத்தை செய்தித்தாள்கள் மூலமாக தெரிந்துகொண்ட டீச்சருக்கு மனநிலை பாதித்தது. நிறைய சிகிச்சை அளித்தும் அவரின் நோய் மாறவில்லை.
வீட்டை விட்டு தன்னிச்சையாக இறங்கி தெருக்களில் நடக்க ஆரம்பித்தார். அவரது காதலர் பணியாற்றிய ரயில் தினசரி தலைச்சேரி ரயில் நிலையத்துக்கு வந்ததும் அதன் என்ஜினில் டிரைவர் கேபினையே பார்த்துக் கொண்டிருப்பார். ரயில் புறப்பட்டுச் சென்றதும் ரயில்வே ஸ்டேஷனை விட்டு வெளியேறி விடுவார்.
இது தினசரி தொடர்கிறது… இன்று தலச்சேரியின் தெருக்களில் இந்த வேடத்தில் பிரியதர்ஷினி டீச்சர் உலா வருவதைப் பார்க்கும் போது காதலுக்கு ஒரு அர்த்தம் இருப்பதாகத் தோன்றுகிறது.
இவரது கதையை, மலையாளத்தில் சினிமாவாக எடுத்தனர்; படம் சக்கைப்போடு போட்டுள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]