பிக்பாஸ் மூலம் அனைவராலும் அறியப்பட்ட யாஷிகா அவருடைய ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விற்கு அதிரடியாக பதிலளித்துள்ளார்.
தமிழில் ‘கவலை வேண்டாம்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். கவுதம் கார்த்திக் நடிப்பில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் தனது கவர்ச்சி நடிப்பின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். பின்னர் தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று கவனம் ஈர்த்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் யாஷிகா ஒரு பயங்கர விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் படுத்த படுக்கை ஆனார். மருத்துவமனையில் பல மாத சிகிச்சைக்கு பின்னர் தற்போது பழைய நிலைமைக்கு வந்துகொண்டிருக்கிறார்.
அதேவேளை சமூக வலைதளங்களில் யாஷிகா ரசிகர்களுடன் கலந்துரையாடி வந்தார். குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது ஒரு ரசிகர், ‘நீங்கள் கன்னித்தன்மையுடன் உள்ளீர்களா?’ என எடக்குமடக்கான கேள்வி கேட்டார். இதற்கு சற்றும் தாமதிக்காமல், ‘இல்லை, நான் யாஷிகா’ என பதிலடி கொடுத்துள்ளார் யாஷிகா. யாஷிகாவின் இந்த துணிச்சல் பேச்சுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]