பௌத்தமயமாக்கல் மூலம் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குள்ளாப்படுவரும் முல்லைத்தீவு மாவட்டம் குமுளமுனை குருந்தூர் மலைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம் ஏ சுமந்திரன் , பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் , இராசமாணிக்கம் சாணக்கியன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் உள்ளிட்ட தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் இணைந்து விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது குருந்தூர் மலையில் வைத்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ,
தொல்லியல் திணைக்களம் தொல்லியல் அடையாளங்களை பாதுகாப்பதற்காக நிறுவப்பட்ட திணைக்களம் எதையும் கட்டுவதற்கான அனுமதி கிடையாது கன்னியா வழக்கிலும் நாங்கள் இதனை நிறைவேற்றியுள்ளோம்.
இன்று நாங்கள் குருந்தூர்மலையில் இந்துக்களின் வழிபாட்டு தலத்திற்கு அவர்கள் செல்ல முடியாதவாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றில் து.ரவிகரன்,மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன்,எஸ்.சிறீதரன் ஆகியேர் மனுதாரர்களாக உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அரசாங்கம் அவ்வாறு இல்லை யாரும் வரலாம் போகலாம் என்று தொல்லியல் திணைக்களத்தின் சத்தியக்கடதாசி போனையும் கொடுத்து சொல்லியுள்ளார்கள்.
வழிபாட்டு சுதந்திரம் மறுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட இடத்திற்கு நாங்கள் வருகைதந்துள்ளோம்.
இங்கே எங்களை தடுக்கவில்லை, ஆனால் அதேவேளையில் இடையில் உள்ள தொல்லியல் அடையாளம் என்று வழக்கில் குறித்து சொல்லப்பட்டிருக்கின்ற முன்னர் தாதுகோபுரம் அமைந்துள்ளதாக சொல்கின்ற இடத்தில் இப்போது கட்டுமானப்பணிகள் நடைபெறுவதை எங்களால் அவதானிக்க முடிந்துள்ளது.
அவர்களால் கொடுக்கப்பட்ட வழக்கில் கூட இவ்வாறு கட்டுமானப்பணிகள் நடைபெற்றதாக சொல்லவில்லை. அதற்கு முன்னர் ரவிகரன்,சிறீதரன் ஆகியோர் இங்கு வந்தபோது அடிமட்டத்தில் தான் இருந்ததாக எனக்கு சொல்லியுள்ளார்கள்.
தொல்லியல் திணைக்களம் தொல்லியல் அடையாளங்களை பாதுகாப்பதற்காக நிறுவப்பட்ட திணைக்களம் எதையும் கட்டுவதற்கான அனுமதி கிடையாது கன்னியா வழக்கிலும் நாங்கள் இதனை நிறைவேற்றியுள்ளோம்.
ஆகையால் குருந்தூர் மலையில் சட்டம் கொடுக்காத ஒரு அதிகாரத்தினை தொல்லியல் திணைக்களம் கையில் எடுத்து புதிதாக ஒரு தாது கோபுரம் கட்டுவதை இங்கு காணக்கூடியதாக இருக்கின்றது.
ஆனால் கிராமமாக இந்த இடத்தில் வந்து வழிபடுபவர்கள் வந்து போகக் கூடியவாறு இருக்க வேண்டும். அங்கு வழிபடுவதற்கு அடையாளமாக வைத்திருந்த சூலம் உடைக்கப்பட்டு ஒரு குழிக்குள் போடப்பட்டுள்ளது.
அது தொடர்பில் பொலிஸ் அதிகாரி து.ரவிகரன் அவர்களுடன் பேசியுள்ளார்கள். அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அந்த சூலம் திரும்ப நிறுவப்பட வேண்டும்.
அதில் வந்து வழிபடுகின்ற சுதந்திரம் மக்களுக்கு தொடர்ச்சியாக இருக்க வேண்டும்.
இதேவேளையில் இந்த குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் நீதிமன்றில் நாங்கள் ஒரு இடைக்கால தடையினை கோரியுள்ளோம்.
அந்த தடை உத்தரவில் தொல்லியல் திணைக்களத்திற்கு சட்டத்தில் கொடுக்கப்பட்ட அதிகாரம் தொல்லியல் அடையங்களை பாதுகாப்பது மட்டும் தான் தொடர்ச்சியாக கட்டிடங்கள் எதுவும் அமைக்கக்கூடாது என்றும் நாங்கள் கேட்டுள்ளோம்.
நீதிமன்றம் அதனை விசாரித்துக்கொண்டிருக்கின்ற வேளையில் அவர்கள் சீக்கிரமாக இதனை கட்டி முடிக்க வேண்டும் என்ற தோரணையில் உடனடியாக இதனை கட்டுகின்றார்கள் போல் தென்படுகின்றது.
தொல்லியல் திணைக்களத்திற்கு சட்டத்தினால் கொடுக்கப்படாத அதிகாரத்தினை செயற்படுத்தப்படுகின்றார்கள் மட்டுமல்ல இப்படியான கட்டிட வேலை நடக்கக்கூடாது என்று நாங்கள் மன்றில் கோரியுள்ளோம் இடைக்கால உத்தரவு சம்பந்தமான விசாரணை வெகுவிரைவில் வருகின்றது அந்த இடைப்பட்ட காலத்தில் அவர்கள் இதனை செய்து முடிக்க முனைகின்றார்கள் இந்த விடயத்தினையும் நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு வருவோம்.
குருந்தூர் மலையினை சுற்றியுள்ள 436 ஏக்கர் வயல் நிலங்கள் தமிழ் விவசாயிகள் காலாகாலமாக செய்கைபண்ணிவந்த இடத்தினைஇப்போது அதனை தடுத்து சுவீகரிப்பதாகவும், இந்த விகாரைக்கு தேவையான வளங்களை கொடுப்பதற்காக அந்த வயல் நிலங்களை தாங்கள் சுவீகரிப்பதாகவும் தொல்லியல் திணைக்களமும் பௌத்த பிக்குவும் காணி உரிமையாளர்களுக்கு பயிர் செய்கைக்கு தடை விதித்துள்ளார்கள்.
இது மிகவும் மோசமான செயற்பாடு இதற்கு அனுமதியளிக்க முடியாது அதற்கும் சட்டபூர்வமாக செய்யும் அனைத்து விடயங்களையும் நாங்கள் செய்வோம்.
சட்டபூர்வமாக செய்து சரிவராத நேரங்களில் நாங்கள் நேரடியாக சில விஷயங்களை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
அந்த வயல் நிலங்கள் தமிழ் விவசாயிகளிடம் இருந்து சுவீகரிப்பதற்கு நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]