தெற்கு நைஜீரியாவின் டெல்டா மாநிலத்தின் கடற்கரையில் பகுதியில் இரண்டு மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் சேமிப்பு திறன் கொண்ட ஒரு கப்பல் வெடித்துள்ளது.
இதனால் சுற்றுச்சூழல் பேரழிவு பற்றிய அச்சம் எழுந்துள்ளதுடன், கப்பலில் பயணித்த நபர்கள் என்ன ஆனார்கள் என்பது தொடர்பிலும் கேள்வி எழுந்துள்ளது.
புதன்கிழமை அதிகாலை எண்ணெய் கப்பல் வெடித்து சிதறியபோது, அதில் 10 பணியாளர்கள் இருந்துள்ளனர்.
எனினும் விபத்தினால் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அல்லாது எவ்வளவு மசகு எண்ணெய் கடலில் கசிந்திருக்கலாம் என்பது குறித்து தெளிவான தகவல்கள் இன்னும் கொடுக்கப்படவில்லை.
நைஜீரிய ஊடகங்களால் வெளியிடப்பட்ட புகைப்படங்கள், தீயினால் மூழ்கடிக்கப்பட்ட கப்பலில் இருந்து அடர்ந்த கறுப்பு புகை வெளியேறுவதைக் காட்டியது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]