உக்ரேன் மீதான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பீஜிங் குளிர்கால ஒலிம்பிக்கின் போட்டிகளின் தொடக்க நிகழ்வில் பங்கெடுப்பதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் வெள்ளிக்கிழமை பீஜிங் சென்றடைந்துள்ளார்.
சீனா சென்றடைந்துள்ள புட்டின், அமெரிக்காவுடனான அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் நெருக்கமான ஒத்துழைப்பைப் பற்றி விவாதிக்க சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் ஒரு சந்திப்பை நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார மற்றும் அரசியல் உறவுகள், குறிப்பாக மொஸ்கோவின் வெளிநாட்டு நாணய ஆதாரத்தை கட்டுப்படுத்தும் ரஷ்யா மீதான மேற்கத்திய பொருளாதார தடைகளுக்கு மத்தியில் சீனாவின் எரிவாயு இறக்குமதிகள் குறித்து ஜி ஜின்பங் மற்றும் புட்டின் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரேனுடனான மோதலில் மொகோவிற்கு சீன ஆதரவு அதிகரித்து வரும் நிலையில் ரஷ்ய தலைவரின் வருகை ஆயுத மோதலில் வெடிக்கும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
சீனாவின் மனித உரிமை மீறல்கள் மற்றும் உய்குர்கள் மற்றும் பிற முஸ்லிம் சிறுபான்மையினரை பீஜிங் நடத்தும் விதம் போன்றவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து, குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வுக்கு அதிகாரிகளை அனுப்ப மட்டோம் என்று அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிற நாடுகளும் முடிவெடுத்துள்ளன.
எனினும் 2022 பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் தனது இருப்பை உறுதிபடுத்திய முதல் வெளிநாட்டுத் தலைவராக புட்டின் மாறினார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]