நாட்டில் மேலும் 82 புதிய ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 88 மாதிரிகளில் 82 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்த தெரிவித்துள்ளார்.
குறித்த 88 மாதிரிகளிலும் டீயு 1 மற்றும் டீயு 2 என்ற இரு பிரதான ஒமிக்ரோன் பிறழ்வுகளின் அலகுகள் உள்ளடங்குகின்றன.
கொழும்பு மாநகரசபையை அண்மித்த பகுதிகள்,கொழும்பு தேசிய மனநல நிறுவனம், கெஸ்பேவ மற்றும் மத்துகம ஆகிய பகுதிகளில் டீயு 1 ரக ஒமிக்ரோன் தொற்றாளர்கள் 30 பேரும் , கொழும்பு மாநகரசபையை அண்மித்த பகுதிகள்,கொழும்பு,கெஸ்பேவ மற்றும் மத்துகம ஆகிய பகுதிகளில் டீயு.1.1 ரக ஒமிக்ரோன் தொற்றாளர்கள் 22 பேரும், கொழும்பு மாநகரசபையை அண்மித்த பகுதிகள் மற்றும் கொழும்பில் டீயு 2 ரக ஒமிக்ரோன் தொற்றாளர்கள் 28 பேரும், கொழும்பில் டீ.1.1.529 ரக ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இருவரும் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதே வேளை ஹொரணை, மத்துகம, பாந்துர மற்றும் தேசிய மனநல நிறுவனம் ஆகிய பகுதிகளில் யுலு.104 என்ற மாறுபட்ட டெல்டா துணை அலகுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
இதே போன்று ஹொரணையில் யுலு.95 என்ற துணை டெல்டா பிறழ்வும், தேசிய மனநல நிறுவனத்தில் டீ.1.617.2 என்ற துணை டெல்டா பிறழ்வும் இனங்காணப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது காணப்படும் பிறழ்வுகளில் 25 சதவீதமானவை டீயு.2 ரகத்தைச் சேர்ந்ததாகும்.
இலங்கையில் இதுவரையில் டீ.1.1.25, டீ.1.258, டீ.4,டீ.4.7, டீ.1.1.365, டீ.1.1525, டீ.1.1. என்ற பிறழ்வுகள் இனங்காணப்பட்டுள்ளன.
மேலும் டீ.1.411 என்ற பிறழ்வு இலங்கையில் உருவாகியதாகும் ஆய்வுகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]