டோங்கோவின் பங்காய்க்கு வடமேற்கில் 219 கிலோ மீற்றர் தொலைவில் 6.2 ரிச்டெர் அளவிலான நிலநடுக்கம் வியாழனன்று ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் 14.5 கிலோ மீற்றர் ஆழத்தில் பதிவானதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஜனவரி 15 அன்று, 170 க்கும் மேற்பட்ட தென் பசிபிக் தீவுகளை உள்ளடக்கிய ஓசியானியாவில் உள்ள ஒரு சிறிய நாடான டோங்கோ அருகே கடலுக்கடியில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டது.
இந்த வெடிப்பினால் அமெரிக்காவின் மேற்கு கடற்கரை, ஹவாய் மற்றும் அலாஸ்காவின் பெரும்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இது 20 கிலோமீட்டர் உயரத்திற்கு பெரிய சாம்பல் மேகங்களை ஏற்படுத்தியது மற்றும் மிகவும் தொலைதூர பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை பாதித்தது.
அதேநேரம் டோங்கோவில் சுனாமி அலைகளையும் ஏற்படுத்தி பாதிப்படையச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]