பணச்சலவையுடன் தொடர்புடைய ஒருவர் இலங்கையின் நிதியமைச்சராக பதவியேற்றுள்ளமையானது, கின்னஸ் சாதனையாகும் என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது இதனை குறிப்பிட்டார்.
பணச்சலவை குற்றத்துடன் தொடர்புடைய ஒருவரை, நாட்டின் நிதிப்பொறுப்புக்கு நியமித்தால், அதனால் கிடைக்கும், பயன்களையே நாடு இன்று அனுபவித்துக்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
அரசாங்கம், எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு டொலர்கள் இல்லை என்று கூறுகின்ற காரணங்களுக்கு பின்னால் இரகசியங்கள் இருக்கலாம் என்று விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.