தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் சிரஞ்சீவி, தான் நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட ஒரு நடிகைக்கு சிபாரிசு செய்திருக்கிறார்.
ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடுவதற்கு தெலுங்கு திரைத்துறையில் பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி, தான் நடிக்கும் போலா ஷங்கர் என்ற படத்தில் ஓ சொல்றியா மாமா என்ற பாடலைப்போல் ஒரு பாடல் வைக்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறார்.
இந்த பாடலுக்கு நடிகை ராஷ்மி கவுதமை நடிக்க வைக்க சிரஞ்சீவியே சிபாரிசு செய்திருக்கிறார். ராஷ்மி கவுதம் தமிழில் சாந்தனுவுடன் கண்டேன் படத்தில் நடித்தவர். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் பணியிலிருந்து பிரபலமானவர். பல தெலுங்கு படங்களில் நாயகியாக நடித்திருக்கும் ராஷ்மி, சிரஞ்சீவியுடன் ஒரு பாடலுக்கு ஆடுவது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.