ஒமிக்ரோன் வைரஸ் தாக்கத்தின் போது எந்தவித அடையாளமும் வெளிப்படுத்தாது வைரஸ் தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், பாரதூரமான அளவில் வைரஸ் தொற்றளார்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை வெளிப்படுத்துவதாகவும் சுகாதார பணியகம் தெரிவிக்கின்றது.
நாட்டில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுப்பரவல் அதிகமாக பரவுவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் சுகாதார பணியகத்தின் அவதானிப்புகள் குறித்து தெரிவிக்கும் போதே சுகாதார பணியகத்தின் பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்தார்.
ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுப்பரவலின் அதிகரிப்பு தன்மையொன்றே காணப்படுகின்றது. தொடர்ச்சியாக ஆறாவது நாளாகவும் 800 இற்கும் அதிகமான வைரஸ் தொற்றாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த 24 நாட்களில் 15 ஆயிரத்து 197 கொவிட் வைரஸ் தொற்றாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த ஒரு வாரகாலத்தில் நாட்டில் மீண்டும் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காட்டுகின்றது. இது ஒமிக்ரோன் வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளமை பாரதூரமான விடயமாகும் என்றும் இதன்போது கூறினார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]