“தன் சொந்த பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் குடும்பத்தில் சிறந்த தலைவாக இருக்க வல்லமையற்றிருக்கும் நடிகர் ரஜினிகாந்திற்கு அரசியலுக்கு வர எந்தத் தகுதியும் இல்லை என்று ஈஸி24நியூஸின் நிறுவனரும் ஆசிரியருமான கிருபா பிள்ளை கூறுகிறார்….”
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக பல வருட காலமாக சொல்லி வந்தார். அது தமிழகஅரசியலில் மாத்திரமின்றி இந்திய அரசியலிலும் முக்கியமான பேசுபொருளாக மாறியிருந்தது.
தமிழ்நாட்டில் நடிகர்கள் தலைவர்களாக வருவது என்பது ஒரு பாரம்பரியமாக காணப்படுகின்றது. எனினும் எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியுமா என்பதை குறித்தும் நாம் அவதானம் செலுத்த வேண்டும்.
பொதுநலனும் தீர்க்கமான சிந்தனையும்தான் சிறந்த தலைவர்களை உருவாக்குகின்றது. ஆனால் ரஜினி காந்த் தன்னுடைய சொந்த வாழ்வில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினைகளைக்கூட தீர்க்க ஆளுமை இன்றி இருக்கிறார்.
அவரது இளைய மகளான ஐஸ்வர்யாவுக்கும் நடிகர் தனுசிற்கும் இடையிலான விவாகரத்து குறித்து அண்மையில் அவர்கள் அறிவித்த செய்தி ரஜினியின் சூப்பர் ஸ்டார் விம்பத்திலும் கீறலை ஏற்படுத்தியுள்ளது.
தன் மகள்களின் வாழ்வில் ஏற்பட்ட திருப்பங்கள், தான் நடத்தும் பாடசாலை ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்காமை, தன் திருமண மண்டபத்திற்கு வரிசெலுத்தாமை போன்ற பல விடயங்களில் ரஜினியின் ஆளுமையும் நேர்மையும் வேடிக்கையாகியுள்ளன.
இப்படி இருக்க, தமிழ்நாட்டுக்கு தலைவனாகும் ஆசையை குறித்து ரஜினி கனவு காண்பது நகைப்பிற்கிடமானது. தான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று அறிவித்திருந்தாலும் அவரைப் போல சினிமா வழி அரசியலுக்கு நுழைய எத்தனிப்பவர்களுக்கு ரஜினியின் தடுமாற்றங்கள் ஒரு பாடமாக அமையும் என்று நம்புகிறேன்.
கிருபா பிள்ளை
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]