கண்டி, பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஸிம்பாப்வேயை 70 ஓட்டங்களுக்கு சுருட்டிய இலங்கை 184 ஓட்டங்களால் அமோக வெற்றிபெற்றது.
இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 – 1 என்ற ஆட்டங்கள் கணக்கல் இலங்கை கைப்பற்றியது.
கடைசி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 254 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் பெத்தும் நிஸ்ஸன்க (55), சரித் அசலன்க (52), குசல் மெண்டிஸ் (36), சாமிக்க கருணாரட்ன (30) ஆகியோர் அதிகப்பட்ச பங்களிப்பை வழங்கினர்.
பெத்தும் நிஸ்ஸன்கவும் குசல் மெண்டிஸும் 80 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்திருந்தனர்.
ஸிம்பாப்வே பந்துவீச்சில் றிச்சர்ட் நிகாரவா 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்பே 24.4 ஓவர்களில் 70 ஓட்டங்களுக்கு சுருண்டு படு தோல்வியை சந்தித்தது.
துடுப்பாட்டத்தில் டக்குட்ஸ்வனாஷே கய்ட்டானோ (19), ரெயான் பூரி (15) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
இலங்கை பந்துவீச்சில் ஜெவ்றி வெண்டர்சே 10 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் துஷ்மன்த சமீர 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரமேஷ் மெண்டிஸ் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: சரித் அசலன்க, தொடர் நாயகன்: பெத்தும் நிஸ்ஸன்க.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]