இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானியாவின் தென் ஆசிய மற்றும் பொதுநலவாய அமைப்புக்கான அமைச்சர் தரிக் அஹமட் பிரபுவிடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
அதுதொடர்பில் தெரியவருவதாவது, “தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரித்தானிய கொண்டிருக்கின்ற கரிசனைகளுக்கும், அதற்காக வழங்கி வரும் ஒத்துழைப்புக்களும் முழுமையான நன்றிகள்.
தமிழ் மக்கள் தமது கருமங்களை சுதந்திரமாக ஆற்றக்கூடியவாறாக இரண்டாக இருந்த நாட்டை 1933 ஆம் ஆண்டு பிரித்தானியாவே ஒன்றாக மாற்றியமைத்தது.
அதன் பின்னரே தமிழ் மக்கள் இரண்டாம் தர பிரஜைகள் ஆக்கப்பட்டார்கள். தற்போது வரையில் சமத்துவமற்றவர்களாக உள்ளார்கள். உரிமைகளை அனுபவிக்க முடியாதவர்களாக உள்ளார்கள்.
சுயநிர்ணயத்தை அடைய முடியாதவர்களாக இருக்கின்றார்கள். ஆகவே இரண்டாக இருந்த நாட்டை ஒன்றாக மாற்றிய பிரித்தானியாவே தமிழர்கள் தமது பூர்வீக மண்ணில் நீடித்து நிலைத்திருக்க கூடிய நிரந்தமான தீர்வொன்றை அடைந்து கொள்வதற்கு வழிவகை செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]