மஸ்கெலியா – ககேவத்த பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக கணவனால் தாக்குதலுக்குள்ளான மனைவி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
19 ஆம் திகதி புதன்கிழமை மஸ்கெலியா – ககேவத்த பொலிஸ் பிரிவில் சந்தேகத்திற்கிடமானமுறையில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இவ்வாறு உயிரிழந்தவர் 24 வயதுடைய பிரவுன்லோ பிரதேசத்தைச் சேர்ந்த யுவதியாவார்.
இவரது மரணம் தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் , குடும்ப தகராறு காரணமாக குறித்த யுவதி அவரது கனவனால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த கொலை தொடர்பில் 23 வயதுடைய அதே பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஸ்கெலிய பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]