இலங்கை அதிபர் சேவை, ஆசிரியர் ஆலோசகர் சேவை மற்றும் இலங்கை ஆசிரியர் சேவை ஆகிய சேவைகள் 2021.08.30 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் நான்கு பிரதான விடயதானங்களுக்கமைய வெவ்வேறாக்கப்பட்டு வரையறுக்கப்பட்ட மூன்று சேவைகளாக்கும் வகையிலாக 2262 கீழ் 45 என்ற இலக்கத்திலான அதி விசேட வர்த்தமானியை கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா வெளியிட்டுள்ளார்.
அமுல்படுத்தல் தினம்.
இலங்கை அதிபர் சேவை,ஆசிரியர் ஆலோசகர் சேவை மற்றும் இலங்கை ஆசிரியர் சேவைகள் 2021.08.30ஆம் திகதி முதல் வெவ்வேறாக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட சேவைகளாக்கப்பட்டுள்ளன.
நியமனத்திற்கான அதிகாரமுடையவர்
நியமித்தல், பதவி உயர்வு, ஒழுக்கம், இடமாற்றம் மற்றும் ஏனைய நிறுவனங்களின் விவகாரம் தொடர்பிலான அதிகாரம் மற்றும் விடயதானங்கள் அந்தந்த சேவைகளுக்காக தற்போது அதிகாரம் காணப்படும் தரப்பினருக்கு வழங்கபபட்டுள்ளது.
சம்பளம்.
அந்தந்த சேவைகளுக்கு உரித்தான விசேட சம்பளம் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய திருத்தங்களை மேற்கொள்ள முடியும்.
பதவி,சேவை பிரிவு, தரம், சேவையுடனான ஏனைய தகுதிகள், ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு.
சேவை பிரிவு, தரம் மற்றும் தகுதி தொடர்பில் உரிய அதிகாரிகளினால் அனுமதிக்கப்பட்ட புதிய மானியங்களுக்கமைய சேவை யாப்பினை தயாரித்து வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிடும் வரை அந்தந்த சேவைகளுக்காக தற்போது செயற்பாட்டில் உள்ள சேவை யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விதிவிதானங்கள் செயற்படுத்தப்படும்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]