பிரிட்டனில் முடக்கல் நிலை அமுலிலிருந்த காலக்கட்டத்தில் கொவிட்-19 விதிமுறைகளை மீறி ஒரு மதுபான விருந்தில் கலந்து கொண்டதை பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஒப்புக் கொண்டுள்ளார்.
இந் நிலையில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை (டோரிக்கள்) பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சனை பதவி விலகுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
2020 மே 20 அன்று டவுனிங் ஸ்ட்ரீட் தோட்டத்தில் நடந்த நிகழ்வில் கொவிட் விதிமுறைகளை மீறி பங்கெடுத்தமைக்காக பிரதமர் பிரதமர் மன்னிப்புக் கேட்டதுடன், பொது மக்களின் கோபத்தை உணர்ந்து கொண்டதாகவும் கூறினார்.
போரிஸ் ஜோன்சன் குறித்த மதுபான விருந்து நிகழ்வில் கலந்து கொண்ட வேளை பிரிட்டனில் கடுமையான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் அமுலில் இருந்ததுடன், ஒன்று கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]