கடந்த ஆண்டு மாத்திரம் 150 மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவற்றில் 81 அனுமதிப்பத்திரங்கள் சுற்றுலா சபையின் அங்கீகாரம் பெற்ற ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
மேலும் பல்பொருள் அங்காடிகளுக்கு 69 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.
எனினும் நகரங்களில் உள்ள பொது மதுபான விற்பனை நிலையங்களுக்கு 2015 ஆம் ஆண்டு முதல் ஒரு உரிமம் கூட வழங்கப்படவில்லை என்றும் கலால் திணைக்களம் கூறியுள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]