கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘மாறன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ஓடிடி-யில் நேரடியாக வெளியாகும் என்ற தகவல் வெளியாகிருக்கிறது.
நடிகர் தனுஷின் 43-வது படம் ‘மாறன்’. துருவங்கள் பதினாறு, மாஃபியா, நரகாசுரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இப்படத்தை இயக்குகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். ’பேட்ட’, ‘மாஸ்டர்’ படங்களைத் தொடர்ந்து மாளவிகா மோகனன் நடிக்கும் மூன்றாவது தமிழ் படம் இதுவாகும்.
மேலும் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார், மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு விவேகானந் சந்தோஷம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தநிலையில் இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா அதிகரிப்பின் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்படுவதாக தகவல் பரவி வருகிறது. இதற்கு முன்னதாக தனுஷின் ஜகமே தந்திரம், கலாட்டா கல்யாணம் ஆகிய படங்கள் ஒடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]