நடிகர் அருண்விஜய் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறன.
இதுதொடர்பாக அவர் தன்னுடைய டுவிட்டர் பதிவில், ” எமக்கு கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. மருத்துவரின் அறிவுரையின் படி தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன்.
விரைவில் குணமடைந்து நலமுடன் பணியாற்றத் தொடங்குவேன். எம்முடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டு, பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என பதிவிட்டிருக்கிறார்.
நடிகர் அருண் விஜய் தற்போது அவரது உறவினரும், இயக்குநருமான ஹரி இயக்கத்தில் தயாராகி வரும் ‘யானை’ படத்தில் நடித்து வருகிறார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]