கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக புத்தாண்டை முன்னிட்டு நேற்றும், இன்றும் 2 நாட்களுக்கு திருச்செந்தூர் கடற்கரை பகுதிகளில் பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
தொடர்ந்து அதிகாலை 3.30 மணிக்கு உச்சிகால அபிஷேக தீபாராதனை, 7.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோவிலில் பல்வேறு கால பூஜைகள் வழக்கம் போல் நடைபெற்றது.
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
அவர்கள் கூறும்போது, புத்தாண்டு முதல் தினத்தில் சாமி தரிசனம் செய்வதால் ஆண்டு முழுவதும் வேண்டுதல்கள் நிறைவேறி நினைத்தது நடைபெறுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக புத்தாண்டை முன்னிட்டு நேற்றும், இன்றும் 2 நாட்களுக்கு திருச்செந்தூர் கடற்கரை பகுதிகளில் பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இதன் காரணமாக கடற்கரை பகுதிக்குள் பக்தர்கள் யாரும் செல்லாத வண்ணம் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இன்று கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]