ஒமிக்ரோன் தொற்று குறித்து மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை என்றும், ஒமிக்ரோன் கடினமான தொற்று பாதிப்பு அல்ல என்றும், இத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் அதிக அளவு ஒக்சிஜன் தேவைபடாது என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
தெற்காசிய நாடுகளான இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம் உள்ளிட்ட பல நாடுகளில் ஒமிக்ரோன் குறித்த அச்சம் மக்களிடத்தில் எழுந்திருக்கிறது. வட இந்திய மாநிலங்களில் சிலவற்றில் உருமாற்றம் பெற்ற கொரோனா தொற்று, ஒமிக்ரோன் தொற்றாக கண்டறியப்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களாக மக்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டு, தொற்று பாதிப்பு குறித்த அச்சத்திலிருந்து மெல்ல மெல்ல விலகி, இயல்புநிலைக்கு மீண்டு வருகிறார்கள். இந்நிலையில் ஓமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருவதால் மக்களிடத்தில் மீண்டும் அச்சம் எழுந்திருக்கிறது.
இந்நிலையில் மருத்துவ நிபுணர்கள் இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் விழிப்புணர்வு விடியோவில் தெரிவித்திருப்பதாவது,
“ஒமிக்ரோன் தொற்று குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. இந்த தொற்று பாதிப்பின் காரணமாக ஒக்சிஜனின் தேவைகள் அதிகரிக்காது. மேலும் டெல்டா வைரஸ் பாதிப்பை விட, ஒமிக்ரோன் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு அதிக அளவு ஒக்சிஜன் தேவைப்படாது.
தனிப்பட்ட நபரின் நோய் எதிர்ப்பு ஆற்றலை கருத்தில்கொண்டு ஒமிக்ரோனை எதிர்கொள்ள வேண்டும் என மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதாலும், தெற்காசிய நாட்டினர் இயற்கையிலேயே நோய் எதிர்ப்பு ஆற்றலுக்கான சக்தியை பெற்றிருப்பதாலும், ஒமைக்ரானை நினைத்து மக்கள் அச்சப்பட வேண்டாம்.
அதே தருணத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தி இருக்கும் மருத்துவ நடைமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். அத்துடன் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும்” என அதில் தெரிவித்திருக்கிறார்கள்
தொகுப்பு: அனுஷா.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]