அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமானது சாத்தான்களின் சங்கமாகும் எனத் தெரிவித்த அரச மருத்துவ அதிகாரிகள் மன்றம், தொழிற்சங்க நவடவடிக்கை என்ற போர்வையில் முன்னெடுக்கப்படும் மாபியாக்களின் செயற்பாடுகளை நிறுத்துவதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அரச மருத்துவ அதிகாரிகள் மன்றத்தின் பேச்சாளர் வைத்தியர் நிரோஷன பிரேமரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கை அடிப்படையற்றதாகும். இதனால் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். உண்மையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் என்ற பெயரில் ஒரு மாபியாவே செயற்பட்டு வருகிறது. இந்த மாபியாவிற்கு ஒத்துழைப்பு வழங்கும் சிலரே தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
தமது தலையீடு இன்றி இடமாற்று பட்டியல் வெளியிப்பட்டுள்ளதாகவும், அதனை தாம் எதிர்ப்பதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இடமாற்ற பட்டியலை தயாரிப்பதற்கு அதன் அங்கத்தவர்களின் பங்குபற்றல் அவசியமற்றது. இதில் எவ்வித அரசியல் தலையீடுகளும் காணப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]