இலங்கையில் ஏற்பட்டிருக்கும் மனித உரிமை மீறல் நிலைமைகளை சவாலுக்கு உட்படுத்த புதிய மனித உரிமைகள் நிகழ்ச்சி திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். மாற்றுக் கொள்ளைகளுக்கான நிறுவன பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து இதனை தெரிவித்துள்ளார்.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சவால்களை வெற்றிக்கொள்ள குடியியல் சமூகம் தனித்து செயற்பட முடியாது எனவே அரசியல் கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயற்பட முடியும்.
இதன்மூலமே சில வெற்றிகளை பெற்றுக்கொள்ள முடியும். இலங்கையை பொறுத்தவரையில் பெரும்பாலும் மாற்றங்கள் அரசியல் கட்சிகளின் ஊடாகவே வருவதால் அவற்றுடன் இணைந்து செயற்படுவது பயனை தரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிதாக தயாரிக்கப்படும் மனித உரிமைகள் மீறல் நிகழ்ச்சி திட்டத்தில் அரசியல், பொருளாதார, ஒருங்கிணைப்பு உள்ளிட்ட உரிமைகள் தொடர்பான அம்சங்கள் இடம்பெற வேண்டும்.
அத்துடன், சுற்றாடல் பாதுகாப்பு உரிமைகளும் அதில் சேர்க்கப்பட வேண்டும் என பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் என்பது ஒரு நிறுவனமாகும். மக்களின் வாக்குகளினாலே அது பதவிக்கு வந்தது. அரசை பொறுத்தவரை அது ஒரு நிறுவனமல்ல, ஆனால் சுதந்திரமுடையது.
ராஜபக்சர்களை பற்றி தனிப்பட்ட ரீதியில், குழு ரீதியில் சில விடயங்களை கூறமுடியும். அண்மைக்கால வரலாற்றை எடுத்துக்கொண்டால் அரசாங்கத்தில் குடும்ப அரசியல் முன்னிலைப்படுத்தப்படுகிறது.
அடுத்ததாக தனிப்பட்ட ரீதியில் தம்மைப்பொறுத்தவரை இதுவரை காலம் இல்லாத நிலையில் தற்போதைய அரசாங்கம் ஒரு ஏகாதிபத்திய அரசாங்கம் என்று அவர் குறிப்பிட்டார்.
தமது குடும்பத்துக்கு முதன்மையான பதவிகளை வழங்கி அவர்களுக்கு அதிக அதிகாரங்களையும் தற்போதைய அரசாங்கம் வழங்கியிருக்கிறது.
இது 20வது திருத்தச் சட்டம் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. அடுத்ததாக சிங்கள பௌத்தர்களை கொண்ட பெரும்பான்மையை இந்த அரசாங்கம் கொண்டிருக்கின்றது.
ஜனாதிபதி சர்வதேச ரீதியாக சென்று குடியியல் சமூகத்துடனும், புலம்பெயர்தோரிடம் பேச வேண்டும் என கூறிவருக்கின்றார். எனினும் அவர் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இதுவரை கலந்துரையாடலிலும் ஈடுபட வில்லை.
அத்துடன், புலம்பெயர்ந்த அமைப்புகளை அவர் தடை செய்திருக்கின்றார். எனவே இது மக்களை ஏமாற்றும் அல்லது முட்டாள்களாக கருதும் கருத்தாகவே எடுத்துக் கொள்ள முடியும்.
இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரை இரட்டை கொள்கைகளை அது கடைப்பிடித்து வருகின்றது. ஒரு பக்கத்தில் நல்லிணக்கம் தொடர்பாக குடியியல் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அதேவேளை சிறையில் அடைக்கப்பட வேண்டிய ஞானசார தேரரை ஓரே நாடு ஓரே சட்டம் செயலணிக்கு தலைவர் ஆக்கியிருக்கின்றது.
அதேபோன்று இலங்கையின் உயர் நீதிமன்றத்தால் சிறுவர்களை கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட சார்ஜன் ரட்நாயக்கவுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்படடது.
இந்த நிலையில், இலங்கையின் நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்பை கருத்தில் கொள்ளாது ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவதை எந்த நீதிக்குள் அடக்க முடியும் என பாக்கியசோதி சரவணமுத்து கேள்வி எழுப்பினார்.
இதன் காரணமாகவே இலங்கை மக்களின் ஒரு பகுதியினர் போர்க் குற்றம் தொடர்பாக சர்வதேச தீர்ப்பாயம் ஒன்றுக்கு செல்ல வேண்டும் என கூறுவதாக அவர் தெரிவித்தார்.
அதேவேளை கோவிட்டினால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்ய இந்த அரசாங்கம் மறுத்தது.
எனவே இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளை இனவாதமாகவே பார்க்க முடியும். வடக்கு கிழக்கு மக்கள் தொந்தரவு மற்றும் அச்சத்திற்க்கு மத்தியிலே வாழ்ந்து வருகின்றனர்.
நாடு இன்று பொருளாதாரத்தில் பின்நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. 69 லட்சம் மக்கள் கோட்டாபய ராஜபக்சவிற்கு வாக்களித்தனர்.
இந்த நிலையில் மக்கள் பொருளாதார நிலைமை காரணமாக வீதிகளில் இறங்கலாம் அவ்வாறு வீதிக்கு வரும் போது அரசாங்கம் இராணுவ படையை அனுப்பும். இதன்போது என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஞானசார தேரர் ராஜபக்சர்களால் கடந்த காலத்தில் கருவியாக பயன்படுத்தப்பட்டார். அதே போன்றே தற்போதும் எதிர்காலத்திலும் பயன்படுத்தப்படுவார்.
எனவே தற்போதைய சூழ்நிலையில், குடியியல் குழுக்கள் இதனை எவ்வாறு சமாளிப்பது என்பதை சிந்திக்க வேண்டும் என்றும் மாற்றுக் கொள்ளைகளுக்கான நிறுவன பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து இதனை தெரிவித்துள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]