‘பிக் பொஸ்’ புகழ் பாடகர் முகேன் ராவ் நடிகராக அறிமுகமாகும் ‘வேலன்’ படத்தின் முன்னோட்டம் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் சிலம்பரசன் தன்னுடைய இணையப்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
அறிமுக இயக்குநர் கவின் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘வேலன்’. இந்த திரைப்படத்தில் மூத்த நடிகர் பிரபு, தம்பி ராமையா, சூரி, பிராங் ஸ்டார் ராகுல், நடிகை மீனாட்சி கோவிந்தராஜன், நடிகை பிரிகடா உள்ளிட்ட பலர் நடிக்க, கதையின் நாயகனாக பிக் பொஸ் புகழ் பாடகர் முகேன் ராவ் அறிமுகமாகிறார்.
கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, கோபி சுந்தர் இசை அமைத்திருக்கிறார். பாடலாசிரியர்கள் மதன் கார்க்கி, உமாதேவி, வேல்முருகன், தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் ஆகியோர் பாடல்கள் எழுதியிருக்க, ஸ்கைமேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் முன்னோட்ட வெளியீடு இன்று சென்னையிலுள்ள தனியார் மகளிர் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இவ்விழாவில் இயக்குநர் கவின் பேசுகையில்,” பிக் பொஸ் போட்டியில் பங்குபற்றி புகழ்பெற்ற முகேனை ஒருநாள் சந்தித்தேன். இரவு பதினோரு மணிக்கு மேல் ‘வேலன்’ படத்தின் கதையை சொன்னேன். அவர் தூங்காமல் கதையை கேட்டு, வயிறு வலிக்க சிரித்து மகிழ்ச்சி அடைந்து படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். அதன் பிறகும் அவரிடம் ஒரு தயக்கம் இருந்தது. அதனை நானும் தயாரிப்பாளரும் இணைந்து ‘வேலன்’ கதை மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் எங்களுக்கு உங்களாலான ஒத்துழைப்பை கொடுத்தால் போதும் என்றோம். அவரும் பொள்ளாச்சியை சேர்ந்த பழனிச்சாமியின் மகனாக அற்புதமாக நடித்திருக்கிறார். அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் ‘வேலன்’ உருவாகியிருக்கிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோபி சுந்தர் அற்புதமான இசையை வழங்கி இருக்கிறார். எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதியன்று இப்படம் வெளியாகிறது.” என்றார்.
‘நாற்பது கதைகளை கேட்டபோது தூங்கிவிட்டேன்’ என பிக் பொஸ் பிரபலம் ஹீரோ அஸ்வின் மேடையில் பேசியதை போல் அல்லாமல், இயக்குநர் இரவில் சொன்ன கதையை தூங்காமல் கேட்டு நடிக்க ஒப்புக் கொண்டதால், மோகன் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘வேலன்’ பெரிய அளவில் வெற்றி பெறும் என திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.ஷ
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]