விராட் கோலியின் கேப்டன் பதவி விவகாரத்தில் கங்குலி விளக்கம் அளிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் கபில்தேவ், மதன் லால் ஆகியோர் வலியுறுத்தி இருந்தனர்.
உலக கோப்பை போட்டிக்கு முன்பு 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகினார். அதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டி கேப்டன் பதவியும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது.
கேப்டன் பதவி விவகாரத்தில் விராட் கோலிக்கும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவர் கங்குலிக்கும் இடையே மோதல் இருப்பது தெரியவந்தது.
‘20 ஓவர்’ கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என கோலியிடம் தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டேன்’ என்று கங்குலி தெரிவித்திருந்தார். இதற்கு கோலி பதில் அளிக்கும்போது, ‘எனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு யாரும் கூறவில்லை’ என்றார்.
இருவரும் மாறுபட்ட கருத்தை சொன்னதால் குழப்பம் இருப்பது தெளிவாக தெரிந்தது.
விராட் கோலியின் கேப்டன் பதவி விவகாரத்தில் கங்குலி விளக்கம் அளிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் கபில்தேவ், மதன் லால் ஆகியோர் வலியுறுத்தி இருந்தனர்.
இந்த நிலையில் கங்குலியிடம் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து அவர் கூறும்போது, ‘விராட் கோலியின் அணுகுமுறை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவர் நிறைய சண்டையிடுவார்’ என்றார்.
அவர் ஏற்கனவே விராட் கோலி விவகாரம் தொடர்பாக கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்து இருந்தார். அதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று கூறியிருந்தார். தற்போது இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து மன அழுத்தத்தையும் எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கங்குலியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கிண்டலாக பதில் அளிக்கும்போது, வாழ்க்கையில் எந்த மன அழுத்தமும் இல்லை. மனைவியும், காதலியும்தான் மன அழுத்தத்தை கொடுக்கிறார்கள் என்றார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]