பிள்ளையார், முருக பெருமான் தேர் உள்ளிட்ட ஐந்து தேர்தல் நான்குரத வீதிகள் வழியாக பக்தர்களால் வடம்பிடித்து இழுத்துச் செல்லப்பட இருக்கிறது.
சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று தேரோட்டமும், நாளை (திங்கட்கிழமை) ஆருத்ரா தரிசன விழாவும் சிறப்பாக நடைபெறும்.
இந்த திருவிழா குறித்து ஏற்கனவே நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கொடியேற்றம், ஆருத்ரா தரிசன விழா உள்ளிட்டவற்றில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டது. மேலும் தேரோட்டத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையே, சிதம்பரத்தில் தேரோட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின.
இந்நிலையில், ஆருத்ரா தரிசனத்தின் ஒரு பகுதியாக கடலூரில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி குறைந்த அளவிலான பக்தர்களுடன் தேரோட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதன்படி இன்று அதிகாலையில் இருந்தே தேரோட்டத்திற்கான வேலைகள் நடைபெற்றன. பிள்ளையார், முருக பெருமான், நடராஜர் தேர் உள்ளிட்ட ஐந்து தேர்தல் நான்குரத வீதிகள் வழியாக பக்தர்களால் இழுத்துச் செல்லப்படும். தற்போது பிள்ளையார் தேர்தல் இழுத்துச் செல்லப்படுகிறது.
மதியம் வரை தேரோட்டம் நடைபெறும். நடராஜர் தேரில் மூலவர் சாமி காட்சி தருவார். இதனால் புகைப்படங்கள் எடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]