யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையத்தின் 27 ஆவது கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் டி.ஜி.எஸ் செனரத் யாபா ஆர்.டபிள்யுபி.ஆர்.எஸ்.பி.என்.டி.யு சிரேஷ்ட அதிகாரி நேற்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
அத்துடன் இராணுவ அணிவகுப்பும் இாணுவ மரியாதைகளும் வழங்கப்பட்டதுடன் மகிழ்ச்சியளிக்கும் முகமாக கட்ளைத் தளபதி பாதுகாப்பு படைகளின் தலைமையத்தின் முன் பகுதியில் மரக்கன்று ஒன்று நடப்பட்டது.
தொடர்ந்து உயிரிழந்த இராணுவ வீரர்களை நினைவு கூரும் முகமாக மலர் அஞ்சிலியினைச் செலுத்தியதுடன் அனைத்து இராணுவ அதிகாரிகள் முன்னிலையிலும் தனது ஆரம்ப உரையினை வழங்கியிருந்தார்.
இந்நிகழ்விற்கு படைத்தளபதிகள் முன் பராமரிப்பு பரிதேசம் (வடக்கின்) தளபதி படைப்பிரிவு தளபதிகள் இராணுவ உயரதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]