சட்டவிரோத கருத்தடை சத்திரசிகிச்சை மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீன் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ உரிய கவனம் செலுத்த வேண்டும். வைத்தியர் குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்தால் அதனை முழுமையாக ஏற்றுக் கொள்வேன்.
எக்காரணிகளுக்காகவும் இவ்விவகாரத்தை மூடிமறைக்க இடமளிக்க போவதில்லை. பாதிக்கப்பட்ட தாய்மார்களுகாக குரல் கொடுத்ததன் காரணத்தினால் தற்போது ஒரு தரப்பினரால் இனவாதியாக சித்தரிக்கப்பட்டுள்ளேன்.என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
குருநாகல் வைத்தியசாலை வைத்தியர் ஷாபியின் சம்பள நிலுவையை செலுத்தி அவரை மீண்டும் பணிக்கு அமர்த்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக வெளியான செய்தியை தொடர்ந்து அவர் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டு அனைத்தும் பொய்யானது எனவும்,அரசியல் நோக்கங்களுக்காக அக்குற்றச்சாட்டு சோடிக்கப்பட்டது எனவும் சமூக வலைத்தளங்களில் திட்டமிட்ட வகையில் செய்திகள் வெளியாகியுள்ளமை காண முடிகிறது.
வைத்தியர் ஷாபி தொடர்பில் குருநாகல் வைத்தியசாலை சுகாதாரத்துறை அமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு சுகாதாரத்துறை அமைச்சின் செயலாளர் அவருக்கு நிலுவை தொகை வழங்கி சேவையில் ஈடுப்படுத்துமாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்.குருநாகல் வைத்தியசாலை அனுப்பி வைத்த அறிக்கையை ஏன் சுகாதாரத்துறை அமைச்சின் செயலாளர் அரச சேவைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கவில்லை.
வைத்தியர ஷாபி விவகாரம் 2019ஆம் ஆண்டு மே மாத காலத்தப்பகுதியில் பேசப்பட்டு பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியது.அவர் சட்டவிரோதமான முறையில் கருத்தடை சத்திரசிகிச்சையினை மேற்கொண்டதாகவும் அதனால் தாம் பாதிக்கப்பட்டதாகவும் 1200 தாய்மார்கள் சாட்சியமளித்துள்ளார்கள்.வைத்தியர் ஷாபியின் செயற்பாடு திட்டமிட்ட மனித உரிமை மீறல் செயற்பாடாகும்.
வைத்தியர் ஷாபியின் செயற்பாடுகளை பார்த்துக் கொண்டு அமைதிக்காக்க வேண்டிய தேவை கிடையாது.சட்டவிரோத கருத்தடை பற்றி பேசினால் நாட்டில் இனவாத பிரச்சினைகள் எழும் என்றும் கருத முடியாது.வைத்தியர் சாஷி மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு நாட்டில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினர் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டு அல்ல என்பதை முதலில் முஸ்லிம் அரசியல்வாதிகள் விளங்கிக் கொள்ள வேண்டும்.அவர்கள் தங்களின் குறுகிய அரசியல் இலாபத்திற்காக இவ்விடயத்தை முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிரான செயற்பாடு என சித்தரித்துக் கொள்கிறார்கள்.
வைத்தியர் ஷாபி தொடர்பில் பொலிஸார் மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் மீது பாரிய சந்தேகம் நிலவுகிறது.உலகளாவிய இஸ்லாமிய அடிப்படைவாதம் பல்வேறு வழிமுறைகளில் செயற்படுகிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது.சட்டவிரோத கருத்தடையும் அதன் நோக்கில் முன்னெடுக்கப்பட்டதொன்று.
வைத்தியர் ஷாபி விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ விசேட கவனம் செலுத்த வேண்டும்.இப்பிரச்சினைக்கு சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் தீர்வு பெற்றுக் கொள்ள முடியும் என கருதியே 2019ஆம் ஆண்டு பெரும்பாலான மக்கள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.
வைத்தியர் ஷாபி நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டால் அதனை முழுமையாக ஏற்றுக் கொள்வேன்.நீதிமன்றத்தை தவிர்த்து ஏனைய காரணிகளினால் இவ்விவகாரத்தை மூடி மறைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.இனவாதத்தை தோற்றுவிக்க வேண்டிய தேவையும் எமக்கு கிடையாது என்றார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]