காலையில் சத்தான உணவு சாப்பிட விரும்புபவர்கள் பிரெட், பயறு வகைகள், காய்கறி சேர்த்து சூப்பரான சாலட் செய்து சாப்பிடலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை பிரெட் துண்டுகள் – 6,
கேரட், வெள்ளரிக்காய், தக்காளி – தலா 1,
முளைக் கட்டிய பாசிப்பயறு, முளைக்கட்டிய கொண்டைக் கடலை – தலா 50 கிராம்,
எலுமிச்சம்பழம் – 1,
கொத்தமல்லி – சிறிதளவு,
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கேரட், வெள்ளரி, தக்காளியை வட்டமாக நறுக்கவும்.
கோதுமை பிரெட்டை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பெரிய பிளேட்டில் வைத்து நடுநடுவே வெள்ளரி, தக்காளி, கேரட், முளைகட்டிய பயறு, கொண்டைக் கடலை, உப்பு, மிளகுத்தூள், நறுக்கிய கொத்தமல்லி சேர்க்கவும்.
எலுமிச்சைச் சாறு பிழிந்து பரவலாக விடவும்.
காலை நேர பரபரப்பில் ஈஸியாக தயாரிக்கலாம். முழுமையான ஊட்டச்சத்துடன் கூடிய பிரேக்ஃ பாஸ்ட்டாக இருக்கும்.