வடக்கிற்குப் போன சீனத்தூதர்
நல்லைக் கந்தனைத் தரிசித்து
என்னென்ன நேர்த்திக்கடன்
வைத்திருப்பார்?
டச்சுக்கோட்டை கிடைத்தால்
அங்கப்பிரதட்சணம் என்றும்
மூன்று தீவுகள் கிடைத்தால்
பறவைக் காவடி என்றும்
சங்கிலியன் கோட்டை கிடைத்தால்
அலகு குத்துதல் என்றும்
நிலாவரைக் கிணறு கிடைத்தால்
பாற்குடம் எடுப்பதென்றும்
துறைமுகம் கிடைத்தால்
மண்சோறு சாப்பிட்டு
மொட்டை அடிப்பதென்றும்
ஏதேதோ வேண்டியிருக்கக்கூடும்!
இப்போது
நல்லூர்க் கந்தனுக்கு
இருப்பதெல்லாம்
ஒரேயொரு குழப்பம்தான்
இந்தியத் தூதருக்கு
“என்ன பதில் சொல்வது?”
-கிரிஷாந்த்ராஜ்