தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் தொடர்பில் இலங்கையில் எழுதப்பட்ட மகாவம்சம் ஆறாம் பாகத்தில் தவறுகள் இருப்பதாக கூறப்படுவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த நுாலில் பல வரலாற்று தவறுகள் இருப்பதாக அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.
எனவே இது போர்க்கால பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன மற்றும் இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா ஆகியோர் கவனம் செலுத்தவேண்டும் என்று சரத் பொன்சேகா கோரியிருந்தார்.
இந்த நிலையில் குறித்த சுட்டிக்காட்டல்கள் தொடர்பில் சரத் பொன்சேகாவுடன் கலந்துரையாடவுள்ளதாக குறிப்பிட்டுள்ள கமல் குணரட்ன, அவரிடம் இருந்து தவறுகள் தொடர்பான ஆவணங்களை பெற்றுக்கொள்ளவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவின் கூற்றுப்படி மகாவம்சம் 6ஆம் பாகத்தில் 70 தவறுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]