ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு உத்தியோகபூர்வமாக விஜயம் செய்த முதல் இஸ்ரேலிய பிரதமர் என்ற பெருமையை நஃப்தலி பென்னட் பெற்றுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட், அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் மொஹம் பின் சயீத்தை அபுதாபியில் உள்ள அவரது தனிப்பட்ட அரண்மனையில் திங்களன்று சந்தித்ததாக பென்னட்டின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஓமிக்ரான் மாறுபாடு பற்றிய கவலைகள் காரணமாக, பத்திரிகையாளர்கள் இன்றி குறைந்த அளவிலான தூதுக்குழுவுடன் இஸ்ரேலிய பிரதமர் நஃப்தலி பென்னட் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
உலக வல்லரசுக்கும் ஈரானுக்கும் இடையிலான அணுசக்திப் பேச்சுவார்த்தைகள் போராடி வரும் பின்னணியில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]